Pages

Saturday, April 6, 2013

ரஸ்யாவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் தமிழ் பெயர்


      தமிழில் பேசவோ எழுதவோ அவமானப்படும் சிலர் இதைப் படியுங்கள். பொது இடங்களில் சிலர் பேசவே தயங்கும் நம் மொழியின் சிறப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதற்கு இது ஓர் சிறிய எடுத்துக் காட்டு..

            நம் தமிழ் நாட்டிற்க்கு  சற்றும் தொடர்பு இல்லாத ரஸ்ய நாடு நம் மொழியை கௌரவிக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா?

    ஆம்.ரஸ்யாவிலுள்ள அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அழகுத் தமிழில் எழுதியுள்ளனர். இதற்கான காரணம் தெரியுமா?




    உலகிள்லுள்ள மிகத் தொன்மையான மொழிகள் ஆறு மட்டும்தான்... அவை தமிழ், கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம். இவற்றில் நான்கு மொழிகளுக்கு தற்போது பேச்சு வழக்கு இல்லை. தமிழும் சீன மொழியும்தான் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கில் இருந்து வருகிறது..
அங்கு மாளிகையிலுள்ள பெயர் பலகையில் நான்கு மொழிகளில் பெயர் எழுதப்பட்டுள்ளது.முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஸ்ய மொழி. இரண்டாவதாக அவர்கள் அண்டை நாட்டு மொழியான சீனம். மூன்றாவதாக பொது மொழியான ஆங்கிலம். நான்காவதாக நம் தமிழ் மொழி.

        உலக மொழிகளில் மிகத் தொன்மையாகவும் இலக்கியச் சிறப்பு வாய்ந்த மொழியாகவும் நம் தமிழ் மொழி விளங்குவதால் இப்பெருமை நம் மொழிக்குக் கிடைத்துள்ளது.

   இது மட்டுமா? நம்மைப் பெருமைப்படுத்தும் மற்றொரு செய்தி தெரியுமா?

    மாளிகையிலுள்ள நூலகத்தில் நம் தமிழ் மறையான திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதலான சிறப்பு..




       "தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா"

4 comments:

  1. thamizhan entru sollada thalai nimirnththu nillada..........................

    ReplyDelete
  2. பெயர்ப் பலகையை வெளியிட்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் நண்பா. அறியாத தாவல். வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பா... :-) தினத்தந்தியில் வெளியான செய்தியைக் கொண்டும், மேலும் சில விவரங்களை சில தளங்களிலிறிந்து சேகரித்தும் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டது. என் நண்பர்கள் சிலரிடம் இந்தப் பெயர்ப் பலகையின் படத்தைக் கேட்டுள்ளேன்.. கதைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இங்கே பகிர்கிறேன்...

    ReplyDelete