Pages

Monday, April 22, 2013

உலகின் மிகப்பெரிய கோவிலான அங்கோர் வாட்டை கட்டியது ஒரு தமிழனென்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?



   உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா? அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய  "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.


 

   அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது. பல்லவ மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட் நகரத்தில் கமய் என்ற  தேசத்தை ஆண்டு வந்தான். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேரு மன்னர்கள் கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!


கோவில் கட்டமைப்பு:
    இந்த கோயிலின் வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. 27 வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூடஇப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு புறச் சுற்றுச்சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணப்படுகிறது.
          இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.

தளத்தினுலுள்ள ஒரு சிற்பம்… வாசுகியை மத்தாக கொண்டு பாற்கடலை, தேவர்களும், அசுரர்களும் கடையும் காட்சி. இதில் 92 அசுரர்களையும், 88 தேவர்களையும் மிகத்தெளிவாக காட்டியுள்ளனர்.









         
           1586 ஆம் ஆண்டு  Antonio da Madalena  என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்ட  இந்தப் படைப்பை அவர் " It is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of" என்று விவரித்துள்ளார்.
                

     பின்னாட்களில் இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும் அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு, பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழ் அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பின்னாட்களில் ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல், நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.


               2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா. இந்த கோவில் தற்பொழுது (1990 இல் இருந்து)  Sok Kong Import Export Company என்ற தனியார் கம்பெனி மூலமாக, சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டு கம்போடியா நாட்டுக்கு மிகப்பெரும் வருமானத்தை கொடுத்துக்கொண்டு வருகிறது.  2005 ஆம் ஆண்டு கணக்கு படி சுமார் 7,00,000 பேர் வருடத்திற்கு வந்து செல்கின்றனர்.


      அங்கோர் வாட்  சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளையே விவரிக்கின்றனர். அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது. 


கம்போடியாவின் முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில் சந்தேகமே இல்லை.



     இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது.



     இயற்கையின் தாக்கத்தாலும், உள் நாட்டு கலவரத்தினாலும் அழிந்தது போக மிச்சம் இருப்பதே இவ்வளவு பிரம்மாண்டம்.
     இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

 கோவிலைப் பற்றிய மேலும் சில தகவல்களுடன் புகைப்படங்கள்..

Saturday, April 13, 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

        



      உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியாலும் , தமிழன் என்ற உணர்வாலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .    
         

   பிறக்கபோகும் புதிய வருடம் நம் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் , நம்முள் இன்னும் ஒற்றுமையை வளர்க்கட்டும் , நமக்கு நீடித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கட்டும் .   




                தமிழன் என்று சொல்லடா !  தலை நிமிர்ந்து நில்லடா !

Saturday, April 6, 2013

ரஸ்யாவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் தமிழ் பெயர்


      தமிழில் பேசவோ எழுதவோ அவமானப்படும் சிலர் இதைப் படியுங்கள். பொது இடங்களில் சிலர் பேசவே தயங்கும் நம் மொழியின் சிறப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதற்கு இது ஓர் சிறிய எடுத்துக் காட்டு..

            நம் தமிழ் நாட்டிற்க்கு  சற்றும் தொடர்பு இல்லாத ரஸ்ய நாடு நம் மொழியை கௌரவிக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா?

    ஆம்.ரஸ்யாவிலுள்ள அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அழகுத் தமிழில் எழுதியுள்ளனர். இதற்கான காரணம் தெரியுமா?




    உலகிள்லுள்ள மிகத் தொன்மையான மொழிகள் ஆறு மட்டும்தான்... அவை தமிழ், கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம். இவற்றில் நான்கு மொழிகளுக்கு தற்போது பேச்சு வழக்கு இல்லை. தமிழும் சீன மொழியும்தான் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கில் இருந்து வருகிறது..
அங்கு மாளிகையிலுள்ள பெயர் பலகையில் நான்கு மொழிகளில் பெயர் எழுதப்பட்டுள்ளது.முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஸ்ய மொழி. இரண்டாவதாக அவர்கள் அண்டை நாட்டு மொழியான சீனம். மூன்றாவதாக பொது மொழியான ஆங்கிலம். நான்காவதாக நம் தமிழ் மொழி.

        உலக மொழிகளில் மிகத் தொன்மையாகவும் இலக்கியச் சிறப்பு வாய்ந்த மொழியாகவும் நம் தமிழ் மொழி விளங்குவதால் இப்பெருமை நம் மொழிக்குக் கிடைத்துள்ளது.

   இது மட்டுமா? நம்மைப் பெருமைப்படுத்தும் மற்றொரு செய்தி தெரியுமா?

    மாளிகையிலுள்ள நூலகத்தில் நம் தமிழ் மறையான திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதலான சிறப்பு..




       "தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா"